சுவர்கள்

அறையின் நான்கு சுவர்களுக்கு

நானூறு இரகசியங்கள்

தெரிந்தாலும்

புதிதாய்க் குடிவருபவருக்கு

வெறுமையாய்க்

காட்சியளிக்கின்றன